இலவச மருத்துவ முகாம்

முனைஞ்சிப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-06-15 18:42 GMT

இட்டமொழி:

முனைஞ்சிப்பட்டி குரு சங்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பருவத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பி.இசக்கித்துரை தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட தொற்றுநோய் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, சுகாதார பணிகள் மற்றும் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் டாக்டர் கற்பகஜோதி மற்றும் மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் ஊட்டச்சத்து கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நம்பிராஜன், சுகாதார ஆய்வாளர் ராபின்ஸ்டன், பகுதி சுகாதார செவிலியர் அருணா கவுசல்யா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்