இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-05-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பொதுநல மருத்துவமனை, நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து ஊராட்சி பரிமேலழகர் இந்து நடுநிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடத்தினார்கள். முகாமிற்கு பொது நல மருத்துவமனை செயலாளர் தங்கராஜ், தலைவர் திலகரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி பரிமேலழகர் கல்வி தர்ம அறக்கட்டளை தலைவர் குணசேகரன், பஞ்சாயத்து தலைவர் வெங்கடாசலம், குப்பம்பட்டி செகண்ட்ஸ் வெக்டர் எஸ் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் டாக்டர்கள் சாரங்கபாணி, ஜெய செல்வராணி, அகஸ்டின் ஜெபக்குமார் வேலம்மாள், ஷோபனா, அஜய் செல்வா ஆகியோர் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை நடத்தினார்கள். முகாமில் இருதய பரிசோதனை, இரும்புச்சத்து பரிசோதனை, காது கேட்கும் திறன் எந்திரம் கொண்டு பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த வகை கண்டறிதல் 6 விதமான கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. சேதுரத்தினம் வரவேற்றார். சுரேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்