இலவச மருத்துவ முகாம்
கடையம் அருகே கோவிந்தபேரியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கடையம்:
கடையம் அருகே கோவிந்தபேரியில் சோகோ நிறுவனத்தின் கலைவாணி கல்வி மையம், சுகம் ஹெல்த் கேர் இணைந்து முழு உடல் இலவச பரிசோதனை முகாம் நடத்தியது. பஞ்சாயத்து தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சரோஜா துரை பாண்டியன் முன்னிலை வகித்தார். கலைவாணி கல்வி மையம் முதல்வர் அக்சயா வரவேற்றார். சோகோ ஐடி நிறுவனரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழு உறுப்பினருமான ஸ்ரீதர் வேம்பு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கோவிந்தபேரி ராஜாங்கபுரத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.