அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க போலியோ பிளஸ் தலைவர் வெங்கடரமணன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ஜி.மணி, எஸ்.செந்தில்குமார், கே.பி.கே.பிரபாகரன், பொருளாளர் மான்மல், பி.ஆர்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் ஆர்.பி.ராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் டி.ஆர்.சுப்பிரமணியம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் எலும்பியல் டாக்டர்.அனில் சந்தர், சர்க்கரை நோய் நிபுணர் வருண் ஆகியோர் மருத்துவ பரிசோதனையும், ஆலோசனயும் வழங்கினர். நகர மன்ற துணைத்தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.