சிவகாசி
சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியின் சார்பில் அனுப்பன்குளம் கிராமத்தில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. இதில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பஞ்சாயத்து தலைவர் கவிதா பாண்டியராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் 100-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு உடற்பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவ முகாமில் 6 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.