உடுமலையை அடுத்த எலையமுத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.டாக்டர் பரமசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமசாமி, உறுப்பினர்கள் கோபால், ராஜாமணி, பாலுசாமி, பாபு, குமாரவேல், இளைஞர் அணி சுபாஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.