இலவச மருத்துவ முகாம்

நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2023-08-10 20:15 GMT

நத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் இலவச பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சரும், நத்தம் தொகுதி எம்.எல். ஏ.வுமான நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, உப்புச்சத்து அளவு, சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் நோயை கட்டுப்படுத்தி, எளிதில் குணமாக்குவது குறித்து சிறப்பு மருத்துவ குழுவினர் விளக்கம் அளித்தனர்.

நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், சுப்பிரமணியன், மணிகண்டன், சின்னு, தொழிலதிபர் அமர்நாத், ஒன்றியக்குழு துணை தலைவர் முத்தையா, மாவட்ட கவுன்சிலர் பார்வதி, நகர பேரவை செயலாளர் சேக் தாவூது, அவைத்தலைவர் சேக் ஒலி, பிறவி கவுண்டர், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆண்டிச்சாமி, ஜெயபிரகாஷ், விவசாய அணி தலைவர் செல்லையா, நடிகர் கண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கட்சி நிர்வாகி குப்பான் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்