உடலில் தானாக தீப்பற்றி எரியும்சிறுவனின் குடும்பத்திற்கு இலவச மனைப்பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகலெக்டர் பழனி வழங்கினார்

உடலில் தானாக தீப்பற்றி எரியும் சிறுவனின் குடும்பத்திற்கு இலவச மனைப்பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை கலெக்டர் பழனி வழங்கினார்.

Update: 2023-03-29 18:45 GMT

திண்டிவனம் அருகே உள்ள நெடிமொழியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாகரன்-ராஜேஸ்வரி. இந்த தம்பதியினரின் மகன் ராகுலின் உடலில், கடந்த 2013-ம் ஆண்டில் 4 முறை தானாக தீப்பற்றி எரிந்தது. பின்னர் ராகுல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ராகுல், அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் ராஜேஸ்வரி, கடந்த சில வாரத்திற்கு முன்பு விழுப்புரம் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வீட்டுமனை, தொகுப்பு வீடு வழங்கும்படி கோரிக்கை வைத்திருந்தார். இதன் அடிப்படையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராகுலின் மருத்துவ செலவிற்காக ஏற்கனவே மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் பராமரிப்பு நிதி உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தற்போது வீட்டுமனைப்பட்டா, வீடு கட்டுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்