இலவச வீட்டுமனைப்பட்டா

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கலெக்டர் பழனி வழங்கினார்;

Update: 2023-04-18 18:45 GMT

விழுப்புரம்

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சுதந்திரமாகவும், ஏற்றத்தாழ்வு மனப்பான்மை இல்லாமல் வாழ்ந்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என உத்தரவிட்டதுடன் சென்னை அண்ணா நினைவு நூற்றாண்டு அரங்கத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையை சேர்ந்த அய்யனார், பொய்யப்பாக்கம் தீபா, வேலம்மாள், பாலமுருகன் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்