இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-06 19:24 GMT

கள்ளக்குறிச்சி, 

சங்கராபுரம் அருகே பிரம்மகுண்டம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- சங்கராபுரம் தாலுகா பிரம்மகுண்டம் கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக வசித்து வருகின்றோம். ஒரே வீட்டில் 3, 4 குடும்பங்கள் நெருக்கடியாக வசித்து வருகிறோம். மிகவும் ஏழ்மை நிலையில் வசித்து வரும் எங்களுக்கு வீட்டு மனைப்பட்ட வழங்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதையடுத்து பிரம்மகுண்டம் கிராமத்தில் வசிக்கும் வீடில்லா அருந்ததியர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு 3 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை கையக்கப்படுத்தியது. இருப்பினும் பல்வேறு காரணங்களுக்காக இது வரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இதனால் நாங்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். இதை தவிர்க்க எங்களுக்கு உடனே இலவச வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்