சுந்தராபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார்

சுந்தராபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்- செ.தாமோதரன் எம்.எல்.ஏ. ெதாடங்கி வைத்தார்

Update: 2023-02-27 18:45 GMT

கிணத்துக்கடவு

ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதி சுந்தாரபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் அ.தி.மு.க சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அ.தி.மு.க கழக அமைப்பு செயலாளரும், கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ செ. தாமோதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க நிர்வாகிகள் குறிச்சி செல்வம், வார்டு செயலாளர்கள் மாணிக்கம், ரவிச்சந்திரன், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்