இலவச கண் சிகிச்சை முகாம்

சிவகிரி அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;

Update: 2023-05-08 18:45 GMT

சிவகிரி:

நண்பனின் கரங்கள் அறக்கட்டளை 4-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதியுதவியுடன் நண்பனின் கரங்கள் அறக்கட்டளை மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சிவகிரி அருகே திருமலாபுரம் என்ற அருளாட்சி காளியம்மன் கோவில் அருகே தனியார் மண்டபத்தில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை பரிசோதனை முகாம் நடத்தியது. டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன் முத்தையா பாண்டியன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.

முகாமில் அனைத்து கண் பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டு, கண்புரை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். திருமலாபுரம் என்ற அருளாட்சி ஊராட்சி மன்ற தலைவர் மாப்பிள்ளை துரைப்பாண்டியன், சான்றோர் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் இசக்கிமுத்து, உள்ளார் விக்கி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நண்பனின் கரங்கள் அறக்கட்டளை ஜெயபிரகாஷ், துரைப்பாண்டியன், சேதுராஜ், சின்னத்துரை, இசக்கித்துரை ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்