இலவச கண் சிகிச்சை முகாம்
பென்னாத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
வேலூரை அடுத்த பென்னத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பா.அருள்நாதன் தலைமை தாங்கினார். பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா, பேரூராட்சி துணை தலைவர் ஜீவசத்தியராஜ், வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் மருத்துவர் கிரண்குமார் வரவேற்றார். இதில் மருத்துவர்கள் ரவி, குமரவேல், மகேஸ்வரன் மற்றும் பைரப்பா ஆகியோர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர். 120-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.