இலவச கண் சிகிச்சை முகாம்

அம்பையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update: 2022-11-07 19:27 GMT

அம்பை:

நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து அம்பையில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. அம்பை இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கிராம உதயம் இயக்குனர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுப்பிரமணிய மழவராயர் கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் டாக்டர் நிகில் அகர்வால் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். இதில் அம்பை பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முகாமில் கிராம உதயம் குழு தலைவர் கலா, மைய தலைவர் வேலம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருத்துவத்துறை பொறுப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்