கயத்தாறு:
கயத்தாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இலவச கண் மற்றும் இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. கயத்தாறு நகர கிளை சார்பில், தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை மற்றும் அருணா கார்டியாக் கேர் இணைந்து நடத்திய இந்த முகாமை கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார். த.மு.மு.க. நகர தலைவர் செய்யது அலி தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் ஜோஸப் நொலாஸ்கோ, த.மு.மு.க. தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஆசாத், செயலாளர் அஸ்மத் உசேன், ம.ம.க. மாவட்ட செயலாளர் ஹசன், மாவட்ட மருத்துவ அணி ஜோதி, துணை செயலாளர் பீர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வருவாய் ஆய்வாளர் நேசமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். த.மு.மு.க. மாநில மருத்துவ அணி செயலாளர் கிதர் முஹம்மது ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் மேலாளர்கள் வேலு, முருகன் தலைமையில் மருத்துவர்கள் முகம்மது பைசல், அருணாச்சலம், ஷோபன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் த.மு.மு.க. நகர, ஒன்றிய மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.