அம்பை:
நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கோபாலசமுத்திரம் கிராம உதயம் அமைப்பினரும், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து அம்பை இந்து தொடக்கப் பள்ளியில் கண் சிகிச்சை முகாமை நடத்தியது. கிராம உதய சட்ட ஆலோசகர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதய குழு தலைவர் கலா, ஒருங்கிணைப்பாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் வேலம்மாள், விஜயா, பிரேமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் லாவன்யா தலைமையிலான குழுவினர் 100-க்கும் மேற்பட்டவருக்கு கண் பரிசோதனை செய்தனர். கிராம உதய பொறுப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.