இலவச கண் சிகிச்சை முகாம்

புளியங்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2023-08-13 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

புளியங்குடி திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன், புளியங்குடி மருதம் தொண்டு அறக்கட்டளை இணைந்து சங்கரா கண் மருத்துவமனை இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தியது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்துறை சுந்தர் ராஜ், மருதம் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் முகேஷ் சிங் மாடசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். திருஞானசம்பந்தர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கணேஷ், புளியங்குடி தொழிலதிபர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வருவாய் துறை அதிகாரி அருண்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் அ.ஆனந்தன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்த அனைவருக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி அவரவர் தங்கள் இல்லத்தில் கட்டுவதற்காக வழங்கப்பட்டது. இதில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். நிகழ்ச்சியில் பவுண்டேஷன் நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொண்டு நிறுவன நிர்வாகி கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்