இலவச கண் சிகிச்சை முகாம்

தியாகராஜபுரம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது

Update: 2023-02-16 19:15 GMT

கொரடாச்சேரி;

கொரடாச்சேரி ஒன்றியம் தாழைக்குடி தியாகராஜபுரம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமுக்கு தாழைக்குடி ஊராட்சி தலைவர் தாழை சிவ மகேந்திரன் தலைமை தாங்கினார். கொரடாச்சேரி ஒன்றிய கழக செயலாளர்கள் சேகர், கலியபெருமாள் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு பேசினார். முகாமில் கண் சம்பந்தமான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு, கண்புரை நோய் உள்ளவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருந்து மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தும் வழங்கி, கண் அறுவை சிகிச்சைக்கு இலவசமாக பரிந்துரை செய்யப்பட்டனர். இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். முகாமில் கட்சி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்