காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

வேலூரில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-23 12:55 GMT

வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முகாமை தொடங்கி வைத்து கண் பரிசோதனை செய்து பேசினார்.

அப்போது போலீசார் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதேபோன்று குடும்பத்தினர் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். முகாமில் சி.எம்.சி. கண் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளை எழுத்து பாதிப்பு, கண்புரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்தனர். இதில் 180 பேர் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.

முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்