இலவச கண் பரிசோதனை முகாம்

ஆலங்காயத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

Update: 2022-06-19 15:57 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பசுபதி தலைமை வகித்தார்.

முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் கண் பார்வை, ரத்தக்கொதிப்பு போன்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 85 நபர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சியில் டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்