திருவொற்றியூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவொற்றியூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;

Update: 2022-11-07 07:23 GMT

மணலியில் உள்ள மத்திய அரசு பெட்ரோலிய நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனம் சார்பில், திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சி.பி.சி.எல். நிர்வாக இயக்குனர் அரவிந்த்குமார் தலைமை தாங்கினார். வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் 10 பேர் கொண்ட தனியார் கண் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் 300-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு கண்பார்வை, கண்புரை, உள்விழிலென்ஸ் பொருத்துதல் போன்ற பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். தேவைப்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சையும், மூக்கு கண்ணாடியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சி.பி.சி.எல். நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரி வெங்கடேஸ்வரலு, அதிகாரிகள் பிரேம்சந்த், புருஷோத்தமன், பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்