இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது;

Update:2022-11-05 00:15 IST

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே கருவந்தா கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணை தலைவர் மங்களம் முன்னிலை வகித்தார். ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். சிலர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். பஞ்சாயத்து செயலாளர் முருகேசன், யேசுராஜா, யேசுதாசன், சவுந்தர், முகாம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்