இலவச கண் பரிசோதனை முகாம்

Update: 2023-10-05 20:15 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதனை பொதுமேலாளர் டேனியல் சாலமன் தொடங்கி வைத்தார். இதில் பணியாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்பட அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதேபோல் அரசு போக்குவரத்து கழகத்தின் அனைத்து பணிமனைகளிலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்