திருக்கோவிலூர்கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருக்கோவிலூர் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2023-04-07 18:45 GMT
திருக்கோவிலூர்கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்


திருக்கோவிலூர் 

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட இயக்கம், லியோ கிளப் விழுப்புரம் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினர்.

முகாமில் கலந்து கொண்டவர்களை கல்லூரியின் முதல்வர் எஸ்.ராஜேந்திரன் வரவேற்றார். முகாமில் கண் மருத்துவர் டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தனர்.முகாம் ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ரவி, நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் ராஜீவ்காந்தி, பிரான்சிஸ் சேவியர், லியோ கிளப் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், உடற்கல்வி இயக்குனர் குமரகுரு மற்றும் துறை தலைவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்