மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

ெமலட்டூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-09-02 20:13 GMT

மெலட்டூர்;

மெலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், துணை தலைவர் பொன்னழகுசீனு, பள்ளி தலைமை ஆசிரியர் அய்யாகண்ணு மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்