விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகா எஸ். மறைக்குளம் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. எஸ். மறைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 110 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை காரியாபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம், மாவட்ட கவுன்சிலரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான சித்தனேந்தல் தங்கதமிழ்வாணன் ஆகியோர் வழங்கினர்.
இதில் ஒன்றிய துணைச்செயலாளர் கந்தசாமி, காரியாபட்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராம்பிரசாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா, எஸ்.மறைக்குளம் அழகு, தனச்செல்வம், முருகானந்தம், ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார், பள்ளி தலையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.