ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகள்

எறையூர் கிராமத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச தென்னங்கன்றுகளை ஒ.ஜோதி எம்.எல்.ஏ வழங்கினார்.

Update: 2023-07-16 13:43 GMT

செய்யாறு

செய்யாறு வட்டார வேளாண்மை துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடங்கம்பட்டு, தென்பூண்டிப்பட்டு, ராமகிருஷ்ணபுரம், எறையூர், கொருக்கை, நாவல், கடுகனூர், பில்லாந்தி, முனுகப்பட்டு, திருமணி, விண்ணவாடி ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு கிராமத்தில் இருந்து சுமார் 300 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வீதம் சுமார் 6500 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கவும், தென்ன மரங்களை அதிக அளவில் வளர்க்க அரசு திட்டமிட்டு உள்ளது.

அதன்படி எறையூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொருக்கை, தென்பூண்டிப்பட்டு, எறையூர் ஆகிய கிராமங்களில் ஆயிரம் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு வட்டார வேளாண் உதவி இயக்குனர் ம.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத்தலைவர் பூங்கொடி பார்த்திபன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ பங்கேற்று ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் கோ.பாலமுருகன், தி.மு.க. நிர்வாகிகள் ஆர்.வேல்முருகன், தினகரன், சி.கே.ரவிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்