சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான இலவச பயிற்சி கலெக்டர் தகவல்

சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளாா்.

Update: 2023-10-05 20:03 GMT


சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு மற்றும் சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி தாட்கோ மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு நேரிடையாக நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். எனவே இந்த தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்