தூய்மை பணியாளர்களுக்கு இலவச செல்போன்

அம்பலூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்பட்டது.

Update: 2022-12-09 17:11 GMT

வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், மக்களுக்கு தேவையான பணிகளை உடனடியாக செய்வதற்கு வசதியாகவும், பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில் ஊராட்சி மன்றம் சார்பில் இலவச செல்போன் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் எ.பி.முருகேசன் தலைமை தாங்கி பணியாளர்களுக்கு செல்போன்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் நர்மதா நந்நகோபால், வார்டு உறுப்பினர்கள் எஸ்.ஞானசேகரன், வி.செல்வநாயகி, டி.சுஜாதா, ஆர்.குமாரி, ஜெ.அலமேலு, ஆர்.சபிதா, சி.பத்மா, பி.பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்