பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கானஇலவச பஸ் பயண அட்டை புதுப்பித்தல் முகாம்23, 24-ந் தேதிகளில் நடக்கிறது
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை புதுப்பித்தல் முகாம் வருகிற 23, 24-ந் தேதிகளில் விழுப்புரத்தில் நடக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பஸ்களில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருதலுக்கான இலவச பஸ் பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-2024-ம் நிதியாண்டிற்கு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை), 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை பெற்றுள்ளவர்கள் மேற்கண்ட நாட்களில் நடைபெறவுள்ள இலவச பஸ் பயண அட்டை புதுப்பித்தல் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மார்பளவு புகைப்படம்-2, இலவச பஸ் பயண அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் கலந்துகொண்டு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.