மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 127 மாணவர்களுக்கும், நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 184 மாணவிகளுக்கும், ஜங்கலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 54 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 365 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவில் கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி பேசினார்கள்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார், பேரூராட்சி கவுன்சிலர் இல.குருசேவ், பள்ளி ஆய்வாளர் தாமோதரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.