மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமன், ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ் மற்றும் முருகேசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் (பொறுப்பு) சண்முகராஜ் செய்திருந்தார். இதில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.