மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.;

Update: 2022-09-06 17:26 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சரிதா ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவிகள் 153 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள் செந்தில்குமார், பாஸ்கர், அசோக்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்