மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-07-29 18:51 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

துணைத் தலைவர் இசக்கி பாண்டியன், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஐசக் வெற்றிச்செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்