பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

புளியங்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.;

Update: 2022-10-01 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் செயலாளரும், ஜமாத் கமிட்டி தலைவருமான முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். ஜமாத் கமிட்டி உதவித்தலைவர் முகம்மது பாவா, செயலாளர் முகம்மது இப்ராகிம், கமிட்டி உறுப்பினர்கள் காதர்மைதின், கலீல் ரஹ்மான், முகம்மது யூசுப், மைதீன்பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சபூர் பாத்திமா வரவேற்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட துணைச்செயலாளர் அப்துல்வகாப் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், புளியங்குடி நகரசபை தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். ஆசிரியர் அப்துல் கமீது நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்