அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வழங்கினார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2022-09-13 17:06 GMT

போளூர் அருகே உள்ள சாணார்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எஸ்.கருணாகரன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நிர்வாகிகள் ஸ்ரீதர், ராகவன், பாண்டுரங்கன், பரத், இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜீவ்காந்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான, அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். முடிவில் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பூபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்