அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டன.
நொய்யல் பெரியார் ஈ.வே.ரா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ கலந்து கொண்டு 47 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதேபோல் புன்னம் பகுதியில் உள்ள அரசு ஆதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 40 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்களை இளங்கோ எம்.எல்.ஏ. வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.