சாத்தான்குளம் பள்ளியில் 167 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
சாத்தான்குளம் பள்ளியில் 167 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.;
தட்டார்மடம்:
சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.எம்.பி.புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் டேவிட் வேதராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய், துணைத்தலைவர் மாரியம்மாள், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜோசப், தாசில்தார் ரதிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல் வரவேற்றார். பள்ளி ஆட்சி மன்றக்குழு தலைவர், சேகர குரு டேவிட் ஞானையா ஆரம்ப ஜெபம் செய்தார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 167 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.என்.டி.டி.ஏ. பி.எஸ்.கே.ராஜரத்னம் நினைவு கல்வியியல் கல்லூரி தாளாளர் காந்திராஜன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் செல்வசிங் பாலையா, திருமண்டல தொடர்பு அலுவலர் ஜாண்சன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், சாத்தான்குளம் வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், பிரபு, முத்துவேல், ரமேஷ்பிரபு, கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.