விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

Update: 2022-09-30 11:37 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம், வெள்ளகோவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு உத்தமபாளையம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 101 சைக்கிள்களும், வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 சைக்கிள்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி ஊராட்சி மன்ற தலைவர்கள் சேடன்குட்டை பழனிச்சாமி, கவிதா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகரச் செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், பள்ளி தலைமையாசிரியர்கள் குணசேகரன், மனோன்மணி உள்பட நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்