இலவச மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம்

வாணியம்பாடி அருகே நடந்த இலவச மூட்டு சிகிச்சை மருத்துவ முகாமை கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-21 16:50 GMT

வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இலவச எலும்பு முறிவு, மூட்டு வலி மற்றும் மூட்டு ஜவ்வு சிகிச்சை முகாம் ஈரோட்டில் உள்ள மருத்துவமனை நடத்தி யது. முகாமை வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் தொடக்கி வைத்தார்.

இதில் சிறப்பு மருத்துவர் ஏ.பிரகாஷ் தலைமையிலான டாக்டர்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்