இலவச ஆம்புலன்ஸ் வசதி
சிதம்பரத்தில் இலவச ஆம்புலன்ஸ் வசதியை ஜமாத் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் லால்கான் தெருவில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் இலவச ஆம்புலன்ஸ் வசதி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு லால்கான் பள்ளிவாசல் செயலாளர் செல்லப்பா தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் தில்லை ஆர்.மக்கின், லப்பைத் தெரு பள்ளிவாசல் சாகித் உசேன், ஹிலீம், நவாப் பள்ளிவாசல் முகமது அலி, காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ஆர்.ராமநாதன், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி முன்னாள் புல தலைவர் டாக்டர் சண்முகம், டாக்டர் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் டாக்டர் எம்.அப்துல் ரகுமான், மேஜர் கமால் ஆகியோர் கலந்துகொண்டு ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வசதியை தொடங்கி வைத்தார். சிதம்பரத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் மக்ருதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மூசா, நகர மன்ற துணைத் தலைவர் முத்து, ரமேஷ் பாபு, காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் ராஜா சம்பத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.