விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி - 5 பேர் கைது
விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி செய்த 5 பேரை தமிழ்நாடு போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
தேனி,
விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி செய்த 5 பேரை தமிழ்நாடு போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
தேனியை சேர்ந்த பெண் ஒருவர், விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, மர்ம கும்பல் 9 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேனி சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து டெல்லிக்கு விரைந்த தனிப்படை போலீசார், 5 பேரை கைது செய்து அழைத்து வந்தனர். மோசடி செய்யப்பட்ட தொகை இன்னும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படும் நிலையில், முக்கிய குற்றவாளியான மாதேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.