நூதன முறையில் ரூ.83 ஆயிரம் மோசடி

சிவகாசியில் நூதன முறையில் ரூ.83 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-01-31 18:53 GMT

சிவகாசி, 

சிவகாசியில் நூதன முறையில் ரூ.83 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

மோட்டார்சைக்கிள்

திருத்தங்கல்-என்.என்.புரம் ரோட்டை சேர்ந்தவர் டேனியல் (வயது 34). இவர் தனது மனைவி பெயரில் உள்ள மோட்டார் சைக்கிளை விற்க விரும்பி அதற்காக இணையத்தில் விளம்பரம் செய்திருந்தார். இதை தொடர்ந்து ரமேஷ் என்பவர் டேனியலை தொடர்பு கொண்டு தான் திருத்தங்கலில் வசித்து வருவதாகவும், மோட்டார் சைக்கிளை நானே வாங்கி கொள்கிறேன் என்று பேசி உள்ளார்.

பின்னர் மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டு அதற்கான தொகை ரூ.83 ஆயிரத்துக்கு செக் கொடுத்துள்ளார். அந்த செக் சிவகாசியில் உள்ள ஒரு வங்கிக்கு சொந்தமானது.

நூதன மோசடி

செக்கை பெற்றுக்கொண்ட டேனியல் தனது வாகனத்தை ரமேசிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். பின்னர் 1 மணி நேரம் கழித்து தனது வங்கி கணக்கை சரி பார்த்தபோது ரூ.83 ஆயிரம் பணம் வந்து சேரவில்லை. இதை தொடர்ந்து டேனியல், செல்போன் மூலம் ரமேசை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ரமேஷ் கொடுத்த செக் மூலம் அந்த வங்கி கணக்கில் ஆய்வு செய்த போது அதில் பணம் இல்லை என்றும், அந்த வங்கியில் கொடுத்த முகவரிக்கு சென்ற போது அங்கு ரமேஷ் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டேனியல் தன்னை நூதன முறையில் மோசடி செய்த ரமேஷ் மீது சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்