மூதாட்டியிடம் ரூ.75 ஆயிரம் மோசடி
மூதாட்டியிடம் ரூ.75 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள லட்சுமிபுரம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மனைவி சின்னபாப்பா (வயது 68). இவரிடம் அதே கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாராயணன் (41) என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.75 ஆயிரத்தை கடனாக வாங்கியிருந்தார். ஆனால் இதுவரை பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுகுறித்து சின்னபாப்பா, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் நாராயணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.