தனியார் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.5 லட்சம் மோசடி
தனியார் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி தென்னூர் அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 59). இவர் ஆன்லைன் மூலம் ஒரு தனியார் வங்கியில் ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 999-ஐ முதலீடு செய்தார். இந்தநிலையில் சீனிவாசன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் அந்த தனியார் வங்கி ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசில் சீனிவாசன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.