தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி

Update: 2023-03-31 18:45 GMT

கோவை

போலியாக மெயில் அனுப்பி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரபேல் (வயது 57). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 14-ந் தேதி தான், நிறுவன முதன்மை மேலாளர் கருணாகரன் என்பவரது பெயரில் மெயில் ஒன்று வந்தது.

அதில் தான் அவசரமாக ஒரு கூட்டத் திற்கு சென்று விட்டதால் வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப மறந்து விட்டேன். எனவே தான் அனுப்ப வேண்டிய பணத்தை அந்த வங்கி கணக்கு எண்ணுக்கு உடனடியாக அனுப்புங்கள். நான் கூட்டத்தில் இருப்பதால் எனக்கு போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தது.

ரூ.4¾ லட்சம் மோசடி

அதை உண்மை என நம்பிய ரபேல் அந்த மெயிலில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கு எண்ணுக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை உடனே அனுப்பினார். ஆனால் அதன் பிறகு அவர் அலுவலகத் தில் விசாரித்த போது போலியாக மெயில் அனுப்பி ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இது குறித்து ரபேல் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, இது போன்று போலியாக மெயில் அனுப்பி பணம் மோசடி செய்யும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும். ரபேல் அளித்த புகாரின் பேரில் அவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணில் பணம் எடுக்க முடியாதவாறு முடக்கி வைத்து உள்ளோம். எனவே அந்த பணம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணம் அனுப்புமாறு வரும் மெயில்களின் உண்மை தன்மை குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு செயல்பட வேண்டும் என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்