திருத்தணி முருகன் கோவிலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி

திருத்தணி முருகன் கோவிலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-05 10:54 GMT

வேலை வாங்கி தருவதாக

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் கிராமம் தங்க சாலை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி ஜீவரத்தினம் (வயது 45). இவர் தனது கணவரை இழந்துவிட்ட காரணத்தால் தனது மகன் அஜித்குமாருக்கு வேலை வாங்கித் தரும்படி தனது தம்பி லோகன் என்பவரை கேட்டார். அவர் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தை் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை ஜீவரத்தினம் அம்மாளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பாலகிருஷ்ணன் ஆர்.கே. பேட்டை அருகே வங்கனூர் கிராமத்தை சேர்ந்த் பிரகாஷ் என்பவரை இந்து அறநிலைத்துறையில் வேலை செய்து வருவதாக ஜீவரத்தினத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ரூ.4 லட்சம் மோசடி

திருத்தணி முருகன் கோவில் அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும் அவரது மகனுக்கு திருத்தணி முருகன் கோவிலில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2017-ம் ஆண்டு் அக்டோபர் மாதம் 12-ந்தேதி ரூ. 4 லட்சத்தை பிரகாஷ் ஜீவரத்தினத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார். ஆனால் இது நாள் வரை வேலை வாங்கி தரவில்லை பணத்தை திருப்பி கேட்டாலும் அவர்கள் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக ஜீவரத்தினம் அம்மாள் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் வங்கனூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்