திருவாரூரை சேர்ந்தவரிடம் ரூ.3½ லட்சம் மோசடி

திருவாரூரை சேர்ந்தவரிடம் ரூ.3½ லட்சம் மோசடி

Update: 2023-06-09 18:45 GMT

வெளிநாட்டில் வேலை எனக்கூறி திருவாரூரை சேர்ந்தவரிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை

திருவாரூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 40). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கின் போது ஊருக்கு வந்த இவர் ஊரில் கூலி வேலை செய்து வந்தார். ஸ்ரீதர் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செய்து வந்தார். இதற்காக அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

இவரது எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு விசா உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று அந்த மர்ம நபர் கேட்டுள்ளார்.

ஆன்லைன் பரிவர்த்தனை

இதனை உண்மை என்று நம்பிய ஸ்ரீதர் கடந்த ஜனவரி மாதம் குறிப்பிட்ட தொகை செலுத்தியுள்ளார். அதே போல் தன்னுடன் வெளிநாட்டில் வேலைபார்த்து தற்போது சொந்த ஊரில் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த காரைக்காலை சேர்ந்த அலெக்ஸ் (41) உள்ளிட்ட 7 பேரிடமும் பணத்தை பெற்று கொண்டு ரூ.3 லட்சத்து 43 ஆயிரத்து 100 ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த நபர் வேலை வாங்கி கொடுக்காமல் நாட்களை கடத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஸ்ரீதர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஸ்ரீதர் திருவாரூர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்