தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-09-16 19:00 GMT

கரும்புக்கடை


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வெளிநாட்டில் வேலை

கோவை சாரமேடு பகுதியை சேர்ந்தவர் கயூப்கான் (வயது 49), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால் அணுகவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அவர், அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, மறுமுனையில் பேசிய நபர் தனது பெயர் கார்த்திகேயன் (35) என்றும், திருச்சியில் இருந்து பேசுவதாகவும், பணம் கொடுத்தால் துபாயில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளார்.

ரூ.1½ லட்சம் மோசடி

அதை நம்பிய கயூப்கான் பணத்தை தயார் செய்து விட்டு கார்த்தி கேயனுக்கு தொடர்பு கொண்டார். உடனே அவர் கோவை வந்து ரூ.1½ லட்சத்தை வாங்கியதுடன், துபாய் செல்வதற்கான விசா உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தார். அதை வைத்து கயூப்கான் துபாய் சென்றார். ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்க வில்லை. இதனால் அவர் சொந்தஊருக்கு திரும்பினார்.

இதையடுத்து அவர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு தனக்கு வேலை கிடைக்காததால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டு உள்ளார். அதற்கு அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கரும்புக்கடை போலீசார் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்