இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி

இணையவழி மூலம் இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-28 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (வயது 23). இவர் கடந்த 23-ந் தேதியன்று தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி கொண்டிருந்தார். அப்போது வந்த விளம்பரத்தில் பகுதிநேர வேலை என குறிப்பிட்டிருந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு தொடர்புகொண்டார்.

அப்போது எதிர்முனையில் பேசிய நபர், ஒரு லிங்கை அனுப்பி அதனுள் சென்று சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றார். இதை நம்பிய ஷோபனா, தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம் ரூ.53,862-ம், தனது தோழியின் கூகுள்பே மூலம் ரூ.40 ஆயிரம், மற்றொரு தோழியின் கூகுள்பே மூலம் ரூ.47,018 ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 880-ஐ, அந்த நபர் அனுப்பிய லிங்கில் இருந்த ரீசார்ஜ் ஆப்ஷன் மூலமாகவும் மற்றும் பணம் அனுப்ப சொன்ன 2 வங்கிகளின் கணக்குகளுக்கும் அனுப்பியுள்ளார்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

ஆனால் ஷோபனாவுக்கு சேர வேண்டிய தொகையை தராமலும், மேலும் பணம் கட்டச்சொல்லியும் அந்த நபர் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து ஷோபனா, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்